Dhoni Retirement Announced : விடை பெற்ற தல தோனி

அவரது ஸ்டைலில் ஓய்வை அறிவித்த தல தோனி

 

Source : The Indian Express
 

தல தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.  பலரும் திரும்ப களத்தில்  வந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தல தோனி யாரும் எதிர்பாராத நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது பதிவை பதிவிட்டுள்ளார். அதில் என்னுடைய தொடக்கத்திலிருந்து 1929 மணி நேரங்கள் எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும்,  கிரிக்கெட் விளையாட்டிலிருந்து  ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தற்போது சென்னை வந்துள்ள தோனி திரும்பவும் சென்னை அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனியின் முடிவு அனைத்து தமிழ்நாட்டு  ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது 39 வயதான தோணி இந்தியாவிற்காக 2007 அம ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2010 மற்றும் 2016 ஆண்டு ஆசியா கோப்பை, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு மினி உலக கோப்பை எனப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை  இந்தியாவிற்காக பெற்றுத்தந்தார். 



இதுவரை அவர் 350 ஒரு நாள் போட்டி, 90 டெஸ்ட் போட்டி மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ள அவர் 10,733  குவித்துள்ளார், அதுவும் பேட்டிங் சராசரி 50+ உடன். பெரும்பாலும் இவர் விளையாண்ட காலகட்டங்களில் பேட்டிங்கில்  டாப் 10 இடங்களிலேயே இருந்துள்ளார். இந்திய அணியின் 200 வெற்றிகளில் அவரது பங்களிப்பு உள்ளது, அதிலும் பாதிக்கு மேல் அவரது தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.

Source : India TV News



மேலும் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராகவும் அறியப்படுகிறார். மொத்தமாக 195 ( stumping ) மற்றும் 634 ( international catches ).   

 28 ஆண்களுக்குப்பிறகு இந்தியாவிற்கு உலக போப்பையை பெற்று  தந்தது தல தோனி தான். மேலும் இந்தியாவின் முதல் ( icc champions trophy ) தோனி தலைமையில் தான் இந்தியா வென்றுள்ளது. 


Source : The Hindu


தோனியின் இந்த முடிவு வெளியான பிறகு பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும்  தலைவர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தோனியை மிகவும் பெருமைப்படுத்தி ட்வீட் பண்ணியுள்ளார். மேலும் விராட் கோலி , அமித் ஷா, அஸ்வின், ஐசிசி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ  என பலரும் தல தோனியை பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்கள். தல தோனியின் இந்த முடிவு  நமக்கு வருத்தத்தை தந்தாலும் 16 வருடங்களில் ஒரு சிறப்பான ஆட்டத்தை இந்தியாவிற்காக அவர் ஆடியுள்ளார். மேலும் எதார்த்தமான தற்பெருமை இல்லாத அவருடைய பண்பினால்                  " கேப்டன் கூல் "  என செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்  தோனி எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் என்பது மட்டும் நிச்சயம.

Post a Comment

0 Comments