Top 5 worst families in the world

உலகின் 5 மோசமான குடும்பங்கள்

நல்ல குடும்பங்கள் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு நாம் பார்க்கும் 5 குடும்பங்கள் ஊருக்கு ஒன்று இருந்தால் போதும், அந்த ஊரே விளங்காமல் போய்விடும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ரொம்பவே மோசமான 5 குடும்பங்கள்  பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

# The Podkopaev Family (Family Of Serial Killers)


Source : Valery Matylsin/TASS


சீரியல் கில்லர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு குடும்பமே சீரியல் கில்லராக இருப்பது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ரஷ்யா  நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் தான் இந்த The Podkopaev Family.

கணவன் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என 4 பேர் கொண்ட ஒரு கொலைகார குடும்பம் இது . இவர்கள் கூட்டாக சேர்ந்து இதுவரை 30 க்கும் மேற்பட்ட மக்களை கொலை செய்துள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம். இவர்கள் நிறைய கொள்ளை சம்பவங்களிலும்  ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நபரை கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்திய பிறகு தான் கொலை செய்துள்ளனர். இருந்தாலும் இவர்களுடைய பெண் விக்டோரியா ஒரு துரதிஷ்டசாலி  என்று தான் சொல்ல வேண்டும். காரணம், இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போனார். இவர்களது கதை ஒரு முடிவுக்கு வந்தாலும் இவர்களால் அநியாயமாக 30 உயிர்கள் பறிபோய்விட்டன.


# Theresa Knorr  (Psycho Mother)

Source : WikipediaTheresa Knorr என்ற சைக்கோ பெண் தன்னுடைய 6 குழந்தைகளை ரொம்பவே மோசமாக சித்திரவதை செய்துள்ளார். இந்த சைக்கோ அந்த குழந்தைகளை உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் நிறைய கொடுமைகள் செய்துள்ளார். இந்த பெண் 4  திருமணங்கள் செய்துள்ளார், அந்த 4 பேரையும் ரொம்பவேகுறைந்த காலத்திற்குள்  விவாகரத்தும் செய்துள்ளார். தனது 4 ஆவது திருமணத்திற்குப்பிறகு போதை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் ஒரு சைக்கோவாக மாறி தனது குழந்தைகளை பல வருடங்களாக கொடுமை செய்து வந்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளை கொலையும் செய்துள்ளார். இதற்காக இந்த சைக்கோ தாய்க்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டது. # The Marshall Family (Fake Breast Family)

Source : avax.newsv


 


உகலத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்குள் பல ஒற்றுமைகள் இருக்கும், ஆனால் இங்கு கதையே வேற. இந்த குடும்பத்தில் உள்ள அம்மா மற்றும் மகள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையே அவர்களது மார்பக அளவுதான். Chantal Marshall தனது மார்பு அழகை கூட்டிக்கொள்ள சிலிக்கான் சர்ஜரி மூலம் தனது மார்பகத்தை பெரிதாக்கிக்கொண்டார். அதோடு விடாமல் தனது 5 மகள்களையும் இந்த சர்ஜரியை செய்ய வலியுறுத்தியுள்ளார். இதில் தனது இளைய மகளான Britney Marshall ஐ தவிர அனைவரும் இந்த சர்ஜரியை செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சைகளுக்காக இவர் இதுவரை 50000 டாலர்களை செலவு செய்துள்ளார். சமுதாயத்தில் ஏதாவதொரு விசயத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது இவரது லட்சியமாம். இதற்காகத்தான் இந்த காரியத்தை செய்துள்ளார் இந்த குடும்ப பெண்மணி.

# The Fritzl Family (The Psycho Father, Foolish Mother and Unlucky Daughter)

Source : dailymail.co.uk

 
Source : wonderslist.com2008 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தான் இது. joseph Fritzl என்ற தந்தை தனது சொந்த மகளை 24 ஆண்டுகளாக வீட்டின் அடித்தளத்தில்   அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். இதற்கு அந்த பெண்ணுடைய தாயாரும் உடைந்தாயாக இருந்துள்ளார். தொடர்ந்து 24 வருடங்களாக மகள் எலிசபெத்தை  சித்திரவதை செய்து சீரழித்துளான் இந்த கிழட்டு சைக்கோ. இதன் விளைவால்  7 குழந்தைகளை பெற்றுள்ளார் எலிசபெத். இதில் 4 நான்கு குழந்தைகள் எலிசபத்தோடும், 3 குழைந்தைகள் ஜோசெப் மற்றும் அவனின் மனைவியுடன் உள்ளது. தனது இளைய மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிய வந்த போது இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எலிசபத். போஸிடம் சிக்கிய ஜோசெப் தற்போது ஆயுள் தணடனை கைதியாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்,

# Colt Clan (Incest Family)


Source : Daily Mirror

Source : 9news.comநாம் பார்க்க இருக்கும் இந்த குடும்பம் தான் உலகத்திலேயே கேடுகெட்ட குடும்பம் என்றும் சொல்லலாம். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த குடும்பத்தை  பற்றி 2013  ஆம் ஆண்டு வெளியே தெரிய வந்தது. இந்த குடும்பத்தில் 40 பேர் உள்ளனர். இதில் வயசான கெழடுகள் முதல் அம்மா, அப்பா, மாமா, அத்தை, அண்ணன்  மற்றும் தங்கை என எல்லாம் உறவுகளும் இருக்காங்க. ஆனால் இவர்களுக்கு இன்செஸ்ட் உறவுமுறை  வைத்துள்ளார். அதாவது பல வகையில் மாறி மாறி உறவுமுறை வைத்துள்ளனர். விபத்தாக ஏற்பட்ட இந்த தகாதஉறவு தற்போது  4 தலைமுறையாக ஒரு கேடுகெட்ட வாழ்க்கையை இந்த குடும்பம் வாழ்ந்துட்டு வருகிறது. இந்த வழக்கை எப்படி கையாள்வது என தெரியாமல் ஆஸ்திரேலிய அரசாங்கமே திணறி வருகிறது மற்றும் மக்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

0 Comments